சந்தையில் பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

Prathees
2 years ago
சந்தையில் பால் தட்டுப்பாடு  ஏற்படும் அபாயம்

திரவ பாலை பேக்கேஜிங் செய்வதற்காக இறக்குமதி செய்யப்படும் பொதிகளுக்கு அரசாங்கம் 5மூ வரி விதிப்பதால் உள்ளுர் திரவ பால் தொழில்துறை பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக தேசிய கால்நடை சபை தெரிவித்துள்ளது.

திரவ பால் மீதான வரியை நீக்குமாறு அரசாங்கத்திடம் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

பால் மா இறக்குமதி செய்யப்படாத சூழலில் உள்ளுர் திரவப் பாலுக்கு வரி விதிக்கப்பட்டமை தொழில்துறையையும் அதன் பொறிமுறைகளையும் பாதித்துள்ளதாக தேசிய கால்நடை சபை  குறிப்பிட்டுள்ளது.

பொதியிடல் மீது விதிக்கப்படும் 5மூ வரி காரணமாக, திரவப் பாலின் விலையை அதிகரிப்பதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும்,திரவப் பாலின் விலையை அதிகரிப்பதற்கு இதுவரை தீர்மானிக்கவில்லை என தேசிய கால்நடை சபை தெரிவித்துள்ளது.