லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பு! தட்டுப்பாடு நீங்குமா?

Mayoorikka
2 years ago
 லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பு! தட்டுப்பாடு நீங்குமா?

நாளாந்த சமையல் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்காக தேவைப்படும் எரிவாயுவை கூடிய விரைவில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது நாளாந்த எரிவாயு தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் எரிவாயுவை ஏற்றிய 02 கப்பல்கள், சிலிண்டர்களுக்கு எரிவாயு நிரப்பும் நிலையங்களை வந்தடைந்துள்ளன லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தையின் தேவைகளில் 80 சதவீதமான எரிவாயுவை தமது நிறுவனம் விநியோகிக்கின்றது.  நுகர்வோர் விவகார அதிகார சபையின் தரம் மற்றும் கண்காணிப்பின் கீழ் தயாரிப்பு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, இதற்கு முன்னர் சந்தைக்கு விநியோகிக்கப்பட்ட நீலம் மற்றும் கறுப்பு நிற முத்திரையிடப்பட்ட எரிவாயு சிலிண்டர்களை மீளப் பெறுவதற்கான தொழில்நுட்ப ரீதியான நடவடிக்கைகள் முன்னெடுத்துள்ளதாக நிறுவனம் கூறியுள்ளது.

எதிர்காலங்களில் தாமதமின்றி எரிவாயுவை வழங்கும் இயலுமை தமது நிறுவனத்துக்கு உள்ளதாக லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.