புத்தாண்டு கொண்டாட்டத்தில் பட்டாசு வெடிக்க தடை - உகாண்டா அரசு அதிரடி

Prasu
2 years ago
புத்தாண்டு கொண்டாட்டத்தில் பட்டாசு வெடிக்க தடை - உகாண்டா அரசு  அதிரடி

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான உகாண்டாவில் ஒவ்வொரு ஆண்டும் புதுவருட பிறப்பின் போது பட்டாசுகளை வெடித்து புத்தாண்டை வரவேற்பது பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தில் பொதுமக்கள் பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்த நாட்டு அரசு தடைவிதித்துள்ளது. 

கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து உகாண்டா காவல்துறை செய்தி தொடர்பாளர் பிரெட் எனங்கா கூறுகையில் “கொரோனா பரவுவதற்கு வழிவகுக்கும் விதமாக பெரிய குழுக்களாக கூடி கொண்டாடுவதை தவிர்க்க வேண்டும். கூட்டத்தை தவிர்க்க தேவாலயங்களில் இரவு பிரார்த்தனை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு ஊரடங்கு உத்தரவு நேரத்துக்குள் வருவதால், அந்த நேரத்தில் நாங்கள் மிகவும் கண்டிப்புடன் இருப்போம்” என கூறினார்.