உருளைக்கிழங்கு பிரஞ் ஒம்லெட் சுடும் முறை

#Cooking
உருளைக்கிழங்கு பிரஞ் ஒம்லெட் சுடும் முறை

தேவையான பொருட்கள் :

  • முட்டை – 3
  • உருளை கிழங்கு – 2
  • வெங்காயம் – 1
  • தக்காளி – 1
  • பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை – சிறிதளவு
  • மிளகு பொடி – ஒரு ஸ்பூன்
  • மிளகாய்த் தூள் – கால் ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை :

  1.  உருளைக் கிழங்கை வேக வைத்து பொடியாக நறுக்கி கொள்ளவும். அல்லம் ஒன்றும் பாதியாக மசித்து கொள்ளவும்.
  2.  தக்காளி, கொத்தமல்லி, ப.மிளகாய், வெங்காய த்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  3. முட்டையை உப்பு, மிளகாய் தூள் சேர்த்து நன்றாக நுரை வரும்படி அடித்துக் கொள்ளவும்.
  4. ஒரு நான்ஸ்டிக் பானில் சிறிது எண்ணெய் தடவி முட்டையை ஒரு லேயர் ஊற்றவும்.
  5. அதன் மேல் வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, கொத்த மல்லித் தழை, சிறிது மிளகுதூள் தூவி 
  6. அதன் மேல் இன்னொரு லேயர் முட்டையை ஊற்றவும். மிதமான தீயில் மூடி போட்டு 3 நிமிடங்கள் வேக விடவும். 
  7. மறுபடியும் திருப்பி போட்டு 2 நிமிடம் மூடி வைக்கவும்.
  8. இப்பொழுது பொன்னிற உருளைக் கிழங்கு ஃப்ரெஞ்ச் ஆம்லெட் நல்ல வாசனையோடு ரெடி.

குறிப்பு :

உருளைக் கிழங்கை பொடியாக நறுக்கி மசாலா சேர்த்து எண்ணெயில் பொரித்தும் சேர்க்கலாம்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!