கையிருப்பில் இருந்து கடனை செலுத்தினால் நாடு சிக்கலில் மாட்டிவிடும் - பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கை

#SriLanka
கையிருப்பில் இருந்து கடனை செலுத்தினால் நாடு சிக்கலில் மாட்டிவிடும் - பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கை

தற்போதுள்ள வெளிநாட்டுக் கடனை மறுசீரமைக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெரிடாஸ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமைப் பொருளாதார ஆய்வாளர் டாக்டர் நிஷான் டி மெல் கூறுகியுள்ளார்

தற்போதுள்ள வெளிநாட்டு கையிருப்புடன் கடனை செலுத்த அரசாங்கம் தீர்மானித்தால் அது நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதகமான பாதிப்பை ஏற்படுத்தும் என அவர்  தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டின் கையிருப்பை 3.1 பில்லியன் டொலர்களாக அதிகரிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியங்க துனுசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.