உலகம் முழுவதும் 28.48 கோடி பேர் கொரோனாவால் பாதிப்பு..!

Keerthi
2 years ago
உலகம் முழுவதும் 28.48 கோடி பேர் கொரோனாவால் பாதிப்பு..!

தென்ஆப்பிரிக்காவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் பிற நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது. 

இதனிடையே உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. 

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 28.48 கோடியை தாண்டியுள்ளது.  

இதன்படி உலகம் முழுவதும் தற்போது 28 கோடியே 48 லட்சத்து 71 ஆயிரத்து 603 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 25 கோடியே 24 லட்சத்து 197 பேர் குணமடைந்துள்ளனர். 

மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 54 லட்சத்து 38 ஆயிரத்து 175 பேர் உயிரிழந்துள்ளனர். சிகிச்சை பெறுபவர்களில் 89,433 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா  - பாதிப்பு - 54,656,724, உயிரிழப்பு -  844,169, குணமடைந்தோர் - 41,408,253
இந்தியா   -    பாதிப்பு - 34,814,271, உயிரிழப்பு -  480,592, குணமடைந்தோர் - 34,251,292
பிரேசில்   -    பாதிப்பு - 22,263,834, உயிரிழப்பு -  618,870, குணமடைந்தோர் - 21,414,318
இங்கிலாந்து- பாதிப்பு - 12,559,926, உயிரிழப்பு - 148,089, குணமடைந்தோர் - 10,229,561
ரஷ்யா            - பாதிப்பு -  10,458,271, உயிரிழப்பு - 307,022, குணமடைந்தோர் - 9,380,223