நடுவானில் வெடித்த விமானத்தின் கண்ணாடி

Keerthi
4 years ago
நடுவானில் வெடித்த விமானத்தின் கண்ணாடி

200 பயணிகளைக் கொண்ட விமானமொன்று சுமார் 35,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது அதன் கண்ணாடி வெடித்த சம்பவம் பிரித்தானியாவில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 25 ஆம் திகதி லண்டனிலிருந்து கோஸ்டாரிகா நாட்டில் உள்ள சான் ஜோஸ் நகருக்குச் சென்ற விமானத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ தினத்தன்று குறித்த விமானம் 35,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது, அதற்கு மேலாக பறந்த மற்றொரு விமானத்திலிருந்து விழுந்த பனிக் கட்டிக் குவியலொன்று குறித்த விமானத்தின் முன்புற கண்ணாடியில் விழுந்ததில் அக்கண்ணாடியில் பலத்த விரிசல் ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது.

எனினும் சிறப்பாகச் செயற்பட்ட அவ்விமானத்தின்  விமானி, உடனடியாக விசான் ஜோஸ் நகரில் விமானத்தை  பத்திரமாக தரையிறக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் குறித்த விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4