அரசு ஊழியர்களுக்கு பிசிஆர் பரிசோதனை கட்டாயம் - ஷார்ஜா அரசு

Prasu
2 years ago
அரசு ஊழியர்களுக்கு பிசிஆர் பரிசோதனை கட்டாயம் - ஷார்ஜா அரசு

அரசுத்துறை ஊழியர்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு செல்வோர் கொரோனா பிசிஆர் பரிசோதனை முடிவுகளை கொண்டு செல்ல வேண்டும் என்று சார்ஜா மனிதவள மேம்பாட்டுத்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து சார்ஜா மனிதவள மேம்பாட்டுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சார்ஜா அரசுத்துறை அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் சேவைகளை பெறுவதற்காக செல்லும் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா தொற்று இல்லை என்ற பிசிஆர் முடிவுகளை கையில் கொண்டு செல்ல வேண்டும். இதில் 2 டோஸ் தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் போட்டுக்கொண்டவர்கள் 14 நாட்களுக்குள் எடுக்கப்பட்ட பிசிஆர் முடிவுகளை எடுத்து செல்ல வேண்டும்.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் 7 நாட்களுக்குள் எடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகளை கையில் கொண்டு செல்ல வேண்டும். இதில் இரண்டும் இல்லாமல் தொலைத்தூரத்தில் பணியாற்றும் ஊழியர்கள் தகுந்த காரணத்தை அளிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் அவர்களின் ஆண்டு சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் என அறிவிக்கப்படுகிறது.