உலகம் முழுவதும் பொலிவு இழந்த புத்தாண்டுக் கொண்டாட்டங்கள்

Prasu
4 years ago
உலகம் முழுவதும் பொலிவு இழந்த புத்தாண்டுக் கொண்டாட்டங்கள்

கொரோனா கிருமி ஓமிக்ரான் வடிவில் உலகை அச்சுறுத்தி வருவதால் 2022 புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் பொலிவிழந்து காணப்படுகின்றன.

2020 மார்ச்சில் கொள்ளைநோயாக அறிவிக்கப்பட்ட பின்னர் இதுவரை 5.4 மில்லியன் உலக மக்கள் அந்த நோய்க்குப் பலியாகிவிட்டனர். 

ஈராண்டை நெருங்கும் வேளையிலும் கொள்ளைநோய் அச்சம் உலகை  தொடர்ந்து துரத்துகிறது. 

கடந்த வாரத்தின் ஏழு நாட்களில் 7.3 மில்லியன் கொரோனா சம்பவங்கள் உலகளவில் பதிவானதாக ஏஎஃப்பி கணக்கிட்டுள்ளது. அதன்படி, சராசரியாக நாள் ஒன்றுக்கு ஒரு மில்லியன் பேருக்குத் தொற்று ஏற்படுகிறது. 

கொள்ளைநோய் பரவத் தொடங்கியது முதல் இந்த அளவுக்கு எண்ணிக்கை அதிகரித்திருப்பது இதுவே முதல்முறை. 

எனவே ஒவ்வொரு நாடும் தனது மக்களைப் பாதுகாக்கும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கி வருகின்றன.

மக்கள் பெருந்திராளக் கூடும் நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களை சில நாடுகள் ரத்து செய்துள்ள வேளையில் வேறு சில நாடுகள் கட்டுப்பாடுகளுடன் சிறிய அளவில் நடத்த அனுமதி அளித்துள்ளன. 

இதில் வியப்பு என்னவெனில், ஓமிக்ரான் தொற்று முதன்முதலாகக் கிளம்பிய தென்னாப்பிரிக்காவில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்காக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. 

கிரீஸ் தொடங்கி மெக்சிகோ வரையிலும் பார்சிலோனா தொடங்கி பாலி வரையிலும் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளிலும் இரவுநேரக் கொண்டாட்டங்களுக்குத் தடைவிதிக்கப்பட்டு அல்லது குறைக்கப்பட்டு உள்ளன.

பெருகிவரும் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கையைச் சமாளிக்க திறந்தவெளிகளில் தற்காலிக மருத்துவமனையைத் திறக்க பிரிட்டனின் தேசிய சுகாதாரச் சேவைப் பிரிவு முடிவெடுத்துள்ளது.

மேலும் உலகச்செய்திகளை பார்வையிட இதில் கிலிக் செய்யவும்
 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4