நாளையிலிருந்து அரச சேவைகள் வழமைக்கு !

Prabha Praneetha
2 years ago
நாளையிலிருந்து அரச சேவைகள் வழமைக்கு !

நாளை  முதல் வழமை போன்று பொதுச்சேவை நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு இது தொடர்பான அறிவுறுத்தல்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன.

விவசாயம், கைத்தொழில், வாழ்வாதார மேம்பாடு, உட்கட்டமைப்பு அபிவிருத்தி போன்ற செயற்பாடுகளுக்காக புத்தாண்டுக்காக அரசாங்கம் பாரியளவிலான பணத்தை ஒதுக்கியுள்ளதுடன், அவற்றை சிறப்பாக நிர்வகிப்பதற்கு அரச ஊழியர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என அரச சேவைகள் அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி, ஜே.ஜே ரத்னசிறி தெரிவித்துள்ளாா்.

அதன்படி நாளை முதல் அரச ஊழியர்கள் வழமை போன்று பணிக்கு அழைக்கப்படுவார்கள்.

நாளை காலை தேசியக் கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டு, அரச சேவை பிரமாணம் செய்து, கடமைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

கொருானா பரவல் காரணமாக, பல சந்தர்ப்பங்களில் பொது ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டனர் மற்றும் அத்தியாவசிய ஊழியர்கள் மட்டுமே வேலைக்கு அழைக்கப்பட்டனர்.

இதேவேளை, புதிய பாடசாலை தவணை நாளை ஆரம்பமாகவுள்ளது.

மாணவர்களை குழுக்களாக பள்ளிக்கு அழைத்து வரும் முறையும் செயல்படுத்தப்படும்.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்