ஒமிக்ரோன் தொற்றினால் நன்மை? ஆய்வில் வெளிவந்த தகவல்

Prasu
4 years ago
ஒமிக்ரோன் தொற்றினால் நன்மை? ஆய்வில் வெளிவந்த தகவல்

தென்ஆபிரிக்காவில் ‘ஒமிக்ரோன்’ வைரஸ் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஆச்சரியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

தென்ஆபிரிக்காவில் கொரோனாத்  தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் ஒமிக்ரோனினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின்னர்   ஒமிக்ரோனினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகிய இரு தரப்பினரிடையேயும் அண்மையில்  ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.

குறித்த ஆய்வில், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களிடையே இருந்து இரத்த மாதிரிகளை எடுக்கப்பட்டுப்  பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இவ்ஆய்வின் முடிவில் அவர்களுக்கு டெல்டா வைரஸையும், ஒமிக்ரோன் வைரஸையும் எதிர்க்கும் சக்தி அதிகரித்து காணப்படுகின்றமை  கண்டறியப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக ஏற்கனவே தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிக அளவில் உருவாகி இருப்பதாகவும்  விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே டெல்டா வைரஸை கட்டுப்படுத்தும் வல்லமை ஒமிக்ரோனுக்கு உள்ளதாக விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் உலக செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4