60 வயதில் பல துறைகளில் பட்டயம் பெற்ற நடிகை...கற்பதற்கு வயது தடையல்ல.

Reha
2 years ago
60 வயதில் பல துறைகளில் பட்டயம் பெற்ற நடிகை...கற்பதற்கு வயது தடையல்ல.

கல்வி கற்பதற்கு வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் 60 வயதில் பல்வேறு துறைகளில் பட்டயம் பெற்றுள்ளார் ஸியாங் யுன் (Xiang Yun). இவர் ஒரு நடிகை.

கடந்த ஈராண்டுகளில் கிருமிப்பரவல் காரணத்தால் வேலையிடத்தில் சில சிரமங்களைச் சந்தித்தார்.

ஆனால் அந்தக் காலக்கட்டத்தில் தமது வாழ்நாள் கனவை நிறைவேற்றிக்கொள்ள முற்பட்டார் திருவாட்டி ஸியாங் யுன் (Xiang Yun). மூத்த மகளான இவருக்கு மூன்று தங்கைகளும் ஒரு தம்பியும் உள்ளனர்.

உயர்நிலைக் கல்வியை முடித்த பின்னர், தமது குடும்பத்திற்கு ஆதரவாக இருக்க 16 வயதிலேயே வேலைக்குச் சென்றார். 19 வயதில் கலைத் துறையில் பணிபுரியத் தொடங்கினார்.

40 ஆண்டுகளுக்குப் பின்னர், கோவிட் நோயால் ஏற்பட்ட தடங்கலால் தமது கற்றல் பயணத்தை மீண்டும் தொடங்கினார் திருவாட்டி ஸியாங் யுன் (Xiang Yun).

சத்துணவு, மலர் சார்ந்த சிகிச்சை, ரைக்கி (Reiki) போன்ற பாடங்களில் பட்டயம் பெற்றுள்ளார். தற்போது You Can Be An Angel என்ற மீடியாகார்ப் நாடகத்தில் நடித்து வருகிறார் ஸியாங் யுன் (Xiang Yun).

கற்றுக்கொண்டதை சிறப்பாகப் பயன்படுத்த, கிடைக்கும் இடைவேளைகளில் தமது கற்றல் பயணத்தைத் தொடரவிருப்பதாக அவர் கூறினார். 

மேலும் பல உலகச்செய்திகளை பார்வையிட இதில் கிளிக் செய்யுங்கள்.