விமானக் குப்பைத்தொட்டியில் கண்டெடுக்கப்பட்ட சிசு - தாய் கைது(புகைப்படம் உள்ளே)

Prasu
4 years ago
விமானக் குப்பைத்தொட்டியில் கண்டெடுக்கப்பட்ட சிசு - தாய் கைது(புகைப்படம் உள்ளே)

மொரீஷியஸ் (Mauritius) தீவின் விமான நிலைய ஊழியர்கள் விமானக் கழிப்பறையின் குப்பைத்தொட்டியில் புதிதாகப் பிறந்த சிசு ஒன்றைக் கண்டெடுத்துள்ளனர்.

Air Mauritius விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்தபோது அந்த ஆண் குழந்தையை ஈன்றெடுத்ததாக நம்பப்படும் மடகாஸ்கரைச் சேர்ந்த 20 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த விமானம் மடகாஸ்கரிலிருந்து ஜனவரி முதல் தேதி மொரீஷியஸில் தரையிறங்கியதாக BBC செய்தி நிறுவனம் கூறியது.

வழக்கமான சோதனையின்போது விமான நிலைய அதிகாரிகள் குழந்தையைக் கண்டெடுத்தனர்.

அந்தக் குழந்தை சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டது.

கைது செய்யப்பட்ட பெண் அது தன்னுடைய குழந்தையல்ல என்று முதலில் கூறியதாக BBC சொன்னது.

ஆனால் மருத்துவப் பரிசோதனையில் அவர் அண்மையில் குழந்தையை ஈன்றெடுத்தது தெரியவந்தது.மருத்துவமனையிலிருந்து வெளியானபின்பு சிசுவைக் கைவிட்டதாக அவர்மீது குற்றஞ்சாட்டப்படும்.அந்தப் பெண் ஈராண்டு வேலை அனுமதி அட்டையின்கீழ் மொரீஷியஸிற்கு வந்துள்ளார்.

மேலும் உலக செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4