உலகிலேயே முதன்முறையான மூளையின் சமிக்ஞைகளைப் பயன்படுத்தி ட்வீட் செய்த நபர்

Keerthi
2 years ago
உலகிலேயே முதன்முறையான  மூளையின் சமிக்ஞைகளைப் பயன்படுத்தி ட்வீட் செய்த நபர்

உலகிலேயே முதன்முறையான  மூளையின் சமிக்ஞைகளைப் பயன்படுத்தி (signal) ட்வீட் செய்த நபர் என்கிற பெருமையை அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பிலிப்  ஓ கீப் பெற்றுள்ளார்.

62 வயதான இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு அமியோட்ரோபிக் லேட்டரல் ஸ்கிலெரோசிஸ் (Amyotrophic lateral sclerosis) என்கிற நோயினால் பாதிக்கப்பட்டார். இதனால் இவரின் உடல் முழுமையாக செயலிழந்துவிட்டது.

இதனையடுத்து அவர்  தொடர்பாடலை மேற்கொள்வதற்காக அவரது மூளையில் பொருத்தக் கூடிய வகையில் மைக்ரோ சிப்பொன்றினை கலிபோர்னியாவை சேர்ந்த சிங்க்ரோன் என்கிற கணினி தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இவ் மைக்ரோ சிப் மூலம் சிறிய அளவிலான எண்ண அலைகளை மாத்திரமே தற்போது எழுத்துருவாக்கம் செய்ய முடியும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில் பிலிப்  முதலில் 'hello world' என்கிற வார்த்தையை எண்ணங்களின் மூலம் எழுத்துருவாக்கம் செய்துள்ளதாகவும் இதன் மூலம், உலகிலேயே முதன்முதலில் எண்ணங்களால் ட்வீட் செய்த மனிதர் என்கிற பெருமையை பிலிப் பெற்றுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் இதற்கு முன்னரும்  இது போன்ற பல நவீன தொழில்நுட்பங்களை கையாண்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் உலக செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்