ஹிந்தி திரைப்படத்துறையின் பிரபல பின்னணி பாடகர் சோனு நிகமிற்கு கொரோனா
ஹிந்தி திரைப்படத்துறையின் பிரபல பின்னணி பாடகர் சோனு நிகம் தெலுங்கு, மலையாளம், கன்னடம், குஜராத்தி, மராத்தி உள்பட பல்வேறு இந்திய மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார்.
சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருதினைப் அவர் பெற்றுள்ளார். தற்போது துபாயில் இருக்கும் பாடகர் சோனு நிகம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். தனது மனைவி மதுரிமா நிகம் மற்றும் மகன் நேவான் நிகம் ஆகியோருக்கும் கொரோனா தொற்று இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இணையதள காணொலி இணைப்பு மூலம் அவர் ரசிகர்களிடம் பேசுகையில்,
நான் துபாயில் இருக்கிறேன். புவனேஸ்வரில் நிகழ்ச்சி நடத்தவும், சூப்பர் சிங்கர் சீசன் 3 படப்பிடிப்பிற்காகவும் நான் இந்தியாவுக்கு வர வேண்டியிருந்தது. என்னை நானே பரிசோதித்துக்கொண்டேன், எனக்கு பாசிட்டிவ் என தெரிந்தது. நான் மீண்டும் மீண்டும் பரிசோதிக்கப்பட்டேன், ஆனால் எனது முடிவுகள் பாசிட்டிவ்வாக வந்தன. அதனுடன் வாழ வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
கொரோனா தொற்று இருந்தாலும் நான் இறக்கவில்லை. என் தொண்டையும் நன்றாக இருக்கிறது. என்னால் இழப்பை சந்தித்தவர்களுக்காக நான் வருத்தப்படுகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.