மிளகு, பூண்டுடன் மீன் குழம்பு செய்முறை
#Cooking
Mugunthan Mugunthan
2 years ago
தேவையானவை :
- மீன் (சங்கரா, வெள்ளைக் களங்கா, பாறை, வஞ்சிரம், வவ்வால், வரால்) - 1/4 கிலோ
அரைக்க:
- மிளகு - 1 தேக்கரண்டி.
- பூண்டு - 8 பல்.
- மிளகாய்த் தூள் - 1.5 தேக்கரண்டி.
- தனியாத் தூள் - 2 தேக்கரண்டி.
- சின்ன வெங்காயம் - 10
- தக்காளி - 1 பெரியது.
தாளிக்க:
- வெங்காயம் பொடியாக நறுக்கியது - 1.
- வெந்தயம் - 1/2 தேக்கரண்டி.
- கடுகு - 1/2 தேக்கரண்டி.
- சீரகம் 1/4 தேக்கரண்டி.
- கறிவேப்பிலை - சிறிதளவு.
- எண்ணெய் - தேவையான அளவு.
மற்றவை:
- புளி -1 எலுமிச்சை அளவு
- மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி.
- உப்பு - தேவையானது
செய்முறை :
- புளியை தண்ணீர் விட்டு கரைசல் செய்து, அதனுடன் அரைத்த மசாலா, உப்பு, மஞ்சள் தூள் ஆகிய வற்றைக் கலந்து, சுவை பார்த்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- கடாயில் எண்ணெய் சூடானதும் தாளிப்புப் பொருட்களை சேர்த்து, தாளித்து, கலந்த மசாலாவை ஊற்றி,
- தேவை யான தண்ணீர் கலந்து, பச்சை மசாலா வாசம் நீங்கும் வரை கொதிக்க வைத்து,
- அதன் பின் மீன் துண்டு களை சேர்த்து, மூடி போட்டு 5 நிமிடம் மிதமான தீயில் சமைத்தால்
- எண்ணெய் மேலெழும்பி கவர்ச்சியும், சுவையும் மிக்க மீன் குழம்பு தயாராகி விடும்.
Note:
- வழக்கமாய் செய்யப்படும் மீன் குழம்பை விட சுவை யிலும், நறுமண த்திலும் வேறுபட்ட இந்தக் குழம்பு பெரும் பாலானவர் விரும்பி செய் வார்கள் என நம்புகிறேன்.
- ஒரு முறை செய்து தான் பாருங் களேன்! காரம் கூட்டியோ அல்லது குறைத்தோ அவரவர் விருப்பப் படி செய்து கொள்ளவும்.
மேலும் பல சமையல் குறிப்புகளை பார்வையிட இதில் கிலிக் செய்யுங்கள்.