இங்கிலாந்தில் அரியவை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு செலுத்தப்பட்ட ஊசியின் விலை 18 கோடியா...?

Keerthi
2 years ago
இங்கிலாந்தில் அரியவை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு செலுத்தப்பட்ட ஊசியின் விலை 18 கோடியா...?

கிரௌட் ஃபண்ட் மூலம் திரட்டப்பட்ட நிதியை வைத்து உலகிலேயே அதிக விலையுடைய ஊசியை வாங்கிய மருத்துவர்கள் அதனை அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்தைச் சேர்ந்த 1 வயது குழந்தைக்கு செலுத்தியுள்ளார்கள்.

இங்கிலாந்தில் எட்வர்ட் என்ற 1 வயது குழந்தை வசித்து வருகிறது. இந்த குழந்தை அரியவகை நோயான spinal muscular atrophy யால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தசைக்கு கிடைக்கக்கூடிய போதுமான ஊட்டச்சத்து கிடைக்காத்தால் எழுந்து நிற்கக் கூட முடியாமல் இருந்துள்ளது.

மேலும் அந்த குழந்தை படுத்த படுக்கையாகவே இருக்க வேண்டிய சூழ்நிலையும் உருவாகியுள்ளது. இந்த குழந்தை தொடர்பான தகவல் வெளியான உடனே கிரௌட் ஃபண்டின் மூலம் நிதி திரப்பட்டுள்ளது.

இந்த நிதியை வைத்து இங்கிலாந்தை சேர்ந்த 1 வயது குழந்தையை பாதித்த spinal muscular atrophy கு தேவையான 18 கோடி மதிப்புடைய zolgensma என்ற ஊசியை மருத்துவர்கள் வாங்கியுள்ளார்கள்.

இந்நிலையில் தற்போது இங்கிலாந்தை சேர்ந்த அந்த 1 வயது குழந்தைக்கு மேற்குறிப்பிட்டுள்ள 18 கோடி மதிப்புடைய ஊசியை மருத்துவர்கள் செலுத்தியுள்ளார்கள்.

இந்த ஊசியை மருத்துவர்கள் குழந்தைக்கு செலுத்திய பிறகு தன்னுடைய பிள்ளையும் மற்ற குழந்தைகளைப் போல் ஓடி விளையாடும் என்ற கனவில் அவரது பெற்றோர்கள் உள்ளார்கள்.

மேலும் உலக செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்