கொண்டை ஊசியை விற்பனை செய்து அதன் மூலம் வீடு வாங்கிய இளம் பெண்

Keerthi
2 years ago
கொண்டை ஊசியை  விற்பனை செய்து அதன் மூலம் வீடு வாங்கிய இளம் பெண்

கொண்டை ஊசியை  விற்பனை செய்து அதன் மூலம்  ஈட்டிய வருமானத்தில்   இளம்பெண் ஒருவர் 80 ஆயிரம் டொர்கள் மதிப்புள்ள வீடொன்றினை வாங்கியுள்ள சம்பவம் அமெரிக்காவில்  ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. .

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த 30 வயதான டெமி ஸ்கிப்பர் (Demi Skipper) என்பவரே இவ்வாறு வீடு வாங்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

டிக்-டொக் செய்வதில் ஆர்வம் கொண்ட இவர் கடந்த 2020-ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கின் போது  அதிக அளவு நேரத்தை யூடியூபில் வீடியோக்களைப் பார்ப்பதில் செலவிட்டு வந்துள்ளார்.

இதன் போது பிரபல யூடியூப் தளமொன்றில்  வர்த்தகம் செய்வது தொடர்பான வீடியோவொன்றினைப் பார்த்த அவர் அவ்வீடியோவால் ஈர்க்கப்பட்டு டிக்-டொக் மூலம் வர்த்தகம் செய்யும் பாணியை கையாளத் தொடங்கினார். 

அந்தவகையில் டிக்-டொக் வீடியோக்களின் மூலம் கொண்டை ஊசிகளை விற்பனை செய்யத் தொடங்கினார். இதற்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் தற்போது அவரது பக்கத்தை 50 லட்சத்திற்கும் அதிகமானோர் அவரை  பின்தொடர்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவர் தற்போது அப்பிள் தொலைபேசி, மினி கூப்பர் கார், டிராக்டர்கள் போன்றவற்றை தன்னுடைய டிக்-டாக் பக்கத்தில் அறிமுகம் செய்து விற்பனை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் உலக செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்