அனைத்தையும் அள்ளித்தரும் அகத்தியரின் அற்புத மந்திரம். நீங்களும் பயன்பெறுங்கள்... (சித்தர்களின் இரகசியம் பாகம் - 02)
Keerthi
2 years ago
பிள்ளையார் துணை....
- ஜீவ நாடி அற்புதங்கள் என்ற தொடர் பதிவில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம்.
- நம் தளத்திற்கு முருகன் அருள் முன்னின்று நடத்துவதால் தான், நாம் செய்யும் அனைத்து சேவைகளும் அற்புதமாக நடைபெற்று வருகின்றது.
- ஒவ்வொரு நிகழ்விலும் நாம் நெஞ்சுருகி போகின்றோம். ஆப்பூர் பெருமாள் கோயில் சென்று உழவாரப் பணி செய்ய அருள் கிடைத்ததை பார்த்தோம்.
- ஒரு அண்மைக்கால அற்புதக் கோயில் பற்றி ஜீவ நாடி அற்புதங்கள் பகுதியில் பார்த்தோம். ஜீவ நாடி அற்புதங்கள் பற்றி பேசிக்கொண்டே இருக்கலாம்.
- இன்றைய பதிவிலும் ஜீவ நாடி அற்புதங்களை காண உள்ளோம்.
- நமது கஷ்டங்களுக்குத் தீர்வு கிடைக்காதா என்று ஏங்குபவர்களுக்கு, மிகப் பெரும் அருமருந்தாக இருப்பது இறைவனின் நாம ஜெபம்.
- இதே மாதிரி லிகித ஜெபம் என்று ஒன்றும் இருக்கிறது. பேப்பரில், பழைய டைரியில் , நோட்டுப் புத்தகங்களில் இறை நாமத்தை எழுதுவார்களே அதைத் தான் லிகித ஜெபம் என்று கூறுகிறார்கள்.
- எனக்குத் தெரிந்த சில பிராமண குடும்பங்களில் வயதான அனைவரும், ஒரு நாளின் குறிப்பிட்ட நேரத்தை இதற்கெனவே ஒதுக்கி இடைவிடாமல் எழுதுகிறார்கள். இதனால் கிடைக்கும் சக்தி அபரிமிதமானது.
- அப்படி எழுதும் குடும்பங்கள் அனைத்திலும், பரிபூரண குடும்ப அமைதி நிலவுகிறது. அந்த குடும்ப வாரிசுகள் அனைவரும், இன்று நல்ல வேலையில், மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். காலம் கெட்டுக் கிடக்கும் சூழலில், ஒரு மனிதன் தவறான பாதைக்கு செல்ல நிமிஷ நேரம் போதும். அவ்வாறு செல்ல விடாமல் , இறையருள் தடுத்தாட்கொள்ள - இந்த லிகித ஜெபம் நிச்சயம் உதவும்.
- மேலும், மனம் ஒன்றி எழுத எழுத - இறை சிந்தனை மேலோங்கும்.
- நம்மை அறியாமலே , நாம் அந்த இறைவனின் நேரடிப் பார்வைக்கு உட்படுகிறோம்.
- இப்படிப்பட்ட லிகித ஜெபம் எப்போது நமக்கு கிடைக்கும் என்று நாம் ஏங்கிய நாட்கள் பல உண்டு.
- நம் ஏக்கம் நம் குருநாதர் கண்ணிற்கு தெரிந்து விட்டது போலும். சில நாட்களுக்கு முன்னர் நாம் சித்தன் அருள் வலைத்தளத்தில் பார்த்த போது லிகித ஜெபம் பற்றி குறிப்பிட்டு இருந்தார்கள்.
- அட..இதற்குத் தானே ஆசைப்பட்டோம் குருநாதா என்று மனம் ஆனந்தக் கூத்தாடியது.
- உடனே அவர்களுடன் தொடர்பு கொண்டு அந்த காலத்தில் ஆலயங்களுக்கு மூலவரை ஸ்தாபிக்கும்போது, எந்திரத் தகடுகளில் சில மந்திரங்களை எழுதி, அந்த மூலவருக்கு உரிய மூல மந்திரங்களை எழுதி ஸ்தாபனம் செய்வார்கள்.
- விண்ணில் நிறைந்து இருக்கும் சக்தியை கும்பம் மூலம் ஆகர்ஷித்து , அதை உள் வாங்கி, தீப வழிபாட்டின்போது அதை வழிபடுபவர்களுக்கு கிடைக்க செய்வதில், இந்த மந்திரங்களுக்கு பெரும் பங்கு உண்டு.
- இதைப் போன்ற மிக அரிதான வாய்ப்பு, ஒன்று நம்மைத் தேடி வந்து இருக்கிறது.
- மதுரை பசுமலையில் விரைவில் ஸ்தாபனம் செய்யப்பட விருக்கும், தலையாய சித்தரான ஸ்ரீ அகத்தியர் பீடத்திற்கு இந்த லிகித நாம ஜெபம் ஒரு கோடி எண்ணிக்கை அளவில் தேவைப் படுகிறது.
- நீங்கள் எழுத வேண்டிய மந்திரம் " ஓம் அகத்தீசாய நம:"
மேலும் ஆன்மீகம் தொடர்பான தகவல்களை பார்வையிட இதில் Click செய்யவும்.