உலகிலேயே அதிக மக்கள்தொகையை கொண்டுள்ள சீனாவில் பிறப்பு விகிதம் 1 சதவீதத்துக்கும் கீழ் சரிவு..!

Prasu
4 years ago
உலகிலேயே அதிக மக்கள்தொகையை கொண்டுள்ள சீனாவில் பிறப்பு விகிதம் 1 சதவீதத்துக்கும் கீழ் சரிவு..!

உலகிலேயே அதிக மக்கள்தொகையை கொண்டுள்ள நாடு சீனா. ஆனால் அங்கு சமீபகாலமாக குழந்தைகள் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

இதை சரிக்கட்ட சீன தம்பதிகள் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்வதற்கு இருந்த கட்டுப்பாட்டை நீக்கி, இனி 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என அந்த நாட்டு அரசு கடந்த ஆகஸ்டு மாதம் அறிவித்தது.

அதை தொடர்ந்து, சீன தம்பதிகள் 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ள ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு மானியங்கள், வரிக்குறைப்பு, பேறுகால விடுமுறை உள்ளிட்ட சலுகைகளை மாகாண அரசுகள் அறிவித்துள்ளன.

இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டில் சீனாவின் 10 மாகாணங்களில் பிறப்பு விகிதம் 1 சதவீதத்துக்கும் கீழ் குறைந்ததாக புள்ளிவிவர தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக அதிக மக்கள்தொகை கொண்ட மாகாணங்களில் ஒன்றான ஹெனான் மாகாணத்தில் 1978-ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக பிறப்பு எண்ணிக்கை 10 லட்சத்துக்கும் கீழ் குறைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020-ம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக சீனாவின் பிறப்பு விகிதம் 1,000 பேருக்கு 8.52 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் இது 43 ஆண்டுகளில் மிகக் குறைவு என்றும் அந்த புள்ளி விவர தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் உலக செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4