சுவையான உருளைகிழங்கு பட்டாணி மசாலா சமைப்பது எப்படி?

#Cooking
சுவையான உருளைகிழங்கு பட்டாணி மசாலா சமைப்பது எப்படி?

தேவையான பொருட்கள்:

  • உருளை கிழங்கு  - 1/4 கிலோ
  • பட்டாணி - 100 கிராம்
  • வெங்காயம் - 1 பெரிய அளவு
  • தக்காளி - 2
  • குழம்பு மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
  • இஞ்சி - சிறிய துண்டு.
  • பூண்டு  - 5 பல்
  • கறிவேப்பிலை - 1 கொத்து
  • கறி மசால் தூள் -  சிறிதளவு
  • உப்பு - தேவையான அளவு
  • தாளிக்க:
  • கடுகு - 1/2 ஸ்பூன்
  • சீரகம் - 1/4 ஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
  • கடலை எண்ணெய் -  ஒரு குழி கரண்டி

செய்முறை:

  • வாணெலியில்  குழி கரண்டி அளவு கடலை எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு அரை ஸ்பூன், சீரகம் அரைஸ்பூன், கறிவேப்பிலை ஒரு கொத்து, தாளித்து கொள்ளவும். 
  • பொடியாக நறுக்கிய வெங்காயம், மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கி கொள்ளவும். 
  • வெங்காயம் வதங்கிய பின்னர், இஞ்சி சிறிதளவு, பூண்டு ஐந்தாறு பற்கள் இரண்டையும் தட்டி போட்டுக் கொள்ளவும். இஞ்சி பூண்டு பற்களை சேர்க்காமலும் செய்யலாம். 
  • பொடியாக நறுக்கிய இரண்டு தக்காளியை போட்டுக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை தொக்கு பதத்திற்கு வதக்கி கொள்ளவும். 
  • தக்காளி விரைவாக வதங்கிட சிறிதளவு உப்புத்தூள் சேர்த்து கொள்ளவும். மூடியிட்டு சிறிது நேரம் வதங்கிட விடவும். 
  • தக்காளி வதங்கிய பின்னர், குழம்பு மிளகாய் தூள் இரண்டு டீஸ்பூன், கறிமசால் தூள் அரை டீஸ்பூன் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி கொள்ளவும்.
  • தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொள்ளவும். 
  • சாதாரண தண்ணீருக்குப் பதிலாக பச்சை பட்டாணி வேக வைத்த தண்ணீரை ஊட்டச்சத்துக்கள் வீணாகாத வண்ணம் சேர்த்து கொள்ளலாம். 
  • பச்சை பட்டாணியை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைத்து விடவும். 
  • பச்சை பட்டாணி மற்றும் உருளைகிழங்கை சிறிதளவு உப்பு சேர்த்து தனித்தனியாக வேக வைத்து எடுத்து கொள்ளவும். 
  • உருளை கிழங்கின் மேல்தோலூரித்து மசித்து கொள்ளவும். தக்காளி வதங்கி தொக்கு பதத்திற்கு வந்ததும், அடுப்பை நிறுத்தி விடலாம். 
  • இப்பொழுது வேக வைத்து, மசித்த உருளைகிழங்கு, பட்டாணி இவற்றை சேர்த்து கிளறி கொள்ளவும். 
  • ரொம்பவும் அழுத்தி, நிறையதரம் கிளற வேண்டாம். ஓரளவு கிளறி, மசாலாக்கள் உருளைகிழங்கின் அனைத்து பக்கங்களிலும் சேரும் வண்ணம் கிளறி விடுங்கள். 
  • உப்பு சுவைத்து பார்த்து கொள்ளவும். சுவையான கல்யாண வீட்டு பட்டாணி உருளைகிழங்கு பொரியல் தயார்.

குறிப்பு :

  • பூரி, சப்பாத்திக்கும் உருளைகிழங்கு பட்டாணி மசாலாக்கு துணை உணவாக வைக்கலாம். 
  • தயிர் சாதம், சாம்பார் சாததிற்கு பொருத்தமாக இருக்கும். சாப்பாத்தியினுள் வைத்து ரோல் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்

மேலும் பல சமையில் குறிப்புகளை பார்வையிட இதில் கிலிக் செய்யுங்கள்.