சிறையில் அடைக்கப்பட்ட சவுதி இளவரசி மற்றும் அவரது மகள் சுஹோத் 3 ஆண்டுகளுக்கு பின் விடுதலை

Keerthi
4 years ago
சிறையில் அடைக்கப்பட்ட சவுதி இளவரசி மற்றும் அவரது மகள் சுஹோத் 3 ஆண்டுகளுக்கு பின் விடுதலை

சவுதி அரச குடும்ப உறுப்பினரான இளவரசி பாஸ்மா பின்ட் சவுத் (57), மற்றும் அவரது மகள் சுஹோத் 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

2019 மார்ச் மாதத்தில் மருத்துவ சிகிச்சைக்காக சுவிட்சர்லாந்து செல்ல திட்டமிட்டு விமான நிலையம் செல்லும் நிலையில் இளவரசி பாஸ்மா சவுத் கைது செய்யப்பட்டார்.

உடல் நலனைக் கருத்தில் கொண்டு அவரை விடுவிக்க வேண்டும் என சவுதி மன்னர் சல்மான் மற்றும் இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோர் 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வேண்டுகோள் விடுத்தனர்.

இந்நிலையில், கடந்த 3 ஆண்டாக சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சவுதி அரேபிய இளவரசி பாஸ்மா மற்றும் அவரது மகள் ஆகியோர் விடுவிக்கப்பட்டு உள்ளனர். மேலும், தடுப்புக் காவலில் இருந்தபோதும் அவர்மீது எந்தக் குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை என அங்குள்ள மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.
மேலும் உலக செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4