நண்டு ஆம்லெட் செய்வது எப்படி?

#Cooking #Egg #Omelette
நண்டு ஆம்லெட் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள் :

  •  நண்டு – 3
  • இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
  • மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்
  • சீரகத்தூள் – ஒன்றரை டீஸ்பூன்
  • பெரிய வெங்காயம் – ஒன்று
  • சின்ன வெங்காயம் – 4
  • மல்லித்தூள் (தனியாத்தூள்) – ஒன்றரை டீஸ்பூன்
  • சோம்புத்தூள் – கால் டீஸ்பூன்
  • உப்பு – தேவைக்கேற்ப
  • கொத்த மல்லித்தழை – சிறிதளவு,
  • மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்

ஆம்லெட்க்கு:

  • முட்டை – 4
  • உப்பு – தேவையான அளவு
  • தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்

செய்முறை :

  1. வெங்காயம், கொத்த மல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். சின்ன வெங்காயத்தை ஒன்றும் பாதியாக தட்டி வைக்கவும். நண்டை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
  2. கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் வெங்காயம்,
  3. சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். 
  4. அடுத்து அதில் மிளகுத்தூள், சீரகத்தூள், மல்லித்தூள், சோம்புத்தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கி சிறிது தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
  5. நண்டு நன்றாக வெந்து தொக்கு பதம் வந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி ஆற விடவும்.
  6. நன்றாக வெந்ததும் நண்டில் இருந்து சதை பகுதியை எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றவும்.
  7. அடுத்து அதில் நண்டு சதை, நண்டு வேக வைத்து மசாலா, தேவைப்பட்டால் உப்பு (நண்டு வேக வைக்கும் போதே உப்பு போட்டு தான் வேக வைத்திருக்கிறோம்) சிறிதளவை சேர்த்து நன்றாக கலக்கவும்.
  8. அடுப்பில் தோசைக் கல்லை வைத்துச் சூடாக்கி தேங்காய் எண்ணெய் சேர்த்து நண்டு, ஆம்லெட் கலவையை ஊற்றி, இரு புறமும் திருப்பி விட்டு வேக வைத்து சூடாக எடுத்து பரிமாறவும். சூப்பரான நண்டு ஆம்லெட் ரெடி

மேலும் பல சமையல் குறிப்புகளை பார்வையிட இதில் கிலிக் செய்யுங்கள்.

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!