இலங்கையின் பொருளாதாரத்துக்குள் நுழைய முயற்சிக்கும் சீனா!?

Prabha Praneetha
2 years ago
இலங்கையின் பொருளாதாரத்துக்குள் நுழைய முயற்சிக்கும் சீனா!?

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் தடைப்பட்டுள்ள சுதந்திர வர்த்தக உடன்படிக்கை பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க சீனா விருப்பம் வெளியிட்டுள்ளது

முக்கியமாக கொரோனாத் தொற்று காரணமாக இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வரும் நிலையில், ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில் இலங்கையுடனான தடைப்பட்ட சுதந்திர வர்த்தக உடன்படிக்கை பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிக்க சீனா விருப்பம் தெரிவித்துள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் ஷென்ஹொங் (Qi Zhenhong) தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வந்திருந்த சீனாவின் அரச சபை உறுப்பினரும் வெளிவிவகார அமைச்சருமான வாங் யீ இலங்கை அரசாங்கத் தலைவர்களுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் சாதகமான கலந்துரையாடல்களை மேற்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

சீன அரசாங்கத்துடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பான பேச்சுவார்த்தையை இலங்கை அரசாங்கம் சில நிபந்தனைகள் காரணமாக நிறுத்தியுள்ளது.

இலங்கையில் இந்த சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை பெற முடிந்தால், சீனாவில் உள்ள 1.4 பில்லியன் மக்கள் தொகை கொண்ட சந்தைக்கு பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியும் என்றும் தூதுவர் குய் ஷென்ஹொங் (Qi Zhenhong) கூறியுள்ளார்.
மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்