நாட்டின் இறக்குமதி செலவினம் கடந்தாண்டில் அதிகரிப்பு

Prabha Praneetha
2 years ago
நாட்டின் இறக்குமதி செலவினம் கடந்தாண்டில் அதிகரிப்பு

நாட்டின் இறக்குமதி செலவினம் கடந்த வருடத்தில் 21.6 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜிட் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

2020 ஆண்டில் 16.1 பில்லியன் அமெரிக்க டொலரும், 2019ம் ஆண்டில் 19.9 பில்லியன் அமெரிக்க டொலராகவும் இறக்குமதி செலவினம் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, 2020 ஆம் ஆண்டை காட்டிலும் கடந்த வருடத்தில் 5.5 பில்லியன் அமெரிக்க டொலரால் இறக்குமதி செலவினம் அதிகரித்துள்ளது.

எதிர்வரும் 22 ஆம் திகதியுடன் காலாவதியாகும் சர்வதேச பன்னாட்டு பிணை முறியினை செலுத்துவதற்கான இயலுமை உள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் தமது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இதில் கிலி்க செய்யுங்கள்.