ரசிகர்களை ஏமாற்றிய அஜித்

#Actor
Prasu
2 years ago
ரசிகர்களை ஏமாற்றிய அஜித்

அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் வலிமை. இப்படம் பொங்கல் தினத்தில் வெளியாக இருந்தது. இந்நிலையில் படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்த்த நிலையில் ஓமிக்ரான் பரவல் தீவிரம் காரணமாக தள்ளி வைக்கப்படுகிறது என அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தார்.

பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இப்படம் வெளியாகவில்லை என்ற வேதனையில் அதனை வெளிப்படுத்தும் விதமாக அஜித் ரசிகர்கள் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். இது சமூக வலைத்தளத்தில் அதிவேகமாக பரவிவருகிறது.

கோவை ரயில் நிலையம் அருகே அஜித் புகைப்படங்களுடன் ஒட்டப்பட்ட அந்த போஸ்டரில் குறிப்பிட்டிருப்பது, "ஏமாற்றம்! ஏமாற்றம்!! ஏமாற்றம்!!! மனசு ரொம்ப வலி(மை)க்குது it's ok" என்று அச்சிட்டு அவர்களின் மனக்குமுறல்களை போஸ்டரின் வாயிலாக தெரிவித்துள்ளனர்.

மேலும் பிக்பாஸ் தொடர்பான தகவல்களுக்கு இதில் கிலிக் செய்யுங்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!