வானில் தோன்றிய வடதுருவ ஒளியால் மக்கள் பரவசம்

Keerthi
2 years ago
வானில் தோன்றிய வடதுருவ ஒளியால் மக்கள் பரவசம்

பின்லாந்து நாட்டில் வழக்கத்தை விட அதிகமாகத் தென்பட்ட வடதுருவ ஒளி (Aurora Borealis ) பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது.

சூரியனிலிருந்து, சூரியத் துணிக்கைகள் அதி கூடிய எண்ணிக்கையில் பிரபஞ்ச வெளியில் வீசப்படும்போது, அவை வேகமாக நகரும். இவை பூமியின் காந்தப்புலத்தினுள் வரும்போது, இரு துருவப் பகுதிகளையும் நோக்கி இழுக்கப்படுகின்றன.அப் பகுதியிலிருக்கும் வளிமண்டலத்தில் இருக்கும் சில வாயுக்களுடன் இந்தச் சூரியத் துணிக்கைகள் மோதும்போது உருவாகும் ஆற்றலே, இத்தகைய ஒளிச் சிதறல்களாய் உருவாகி, வானத்தில் அழகான ஒளிக்கற்றைகள் அசைவது போன்ற தோற்றத்தைத் தருவதாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் இவ் அபூர்வ காட்சி ரொவானியமி நகர் அருகே சுமார் ஒரு மணி நேரத்துக்கு தென்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது,

மேலும் இது குறித்து வெளியான புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் உலக செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்