ரொனால்டோவின் வாழ்க்கையை விவரிக்கும் பெண் தோழி
கால்பந்து விளையாட்டில் இந்த தலைமுறையின் சிறந்த வீரர்களாக கருதப்படுபவர்கள் அர்ஜென்டினாவின் மெஸ்சி, போர்ச்சுக்கலின் கிறிஸ்டியோனோ ரொனால்டோ, பிரேசிலின் நெய்மர். இவர்களில் மெஸ்சிக்கும், ரொனால்டோவுக்கும் இடையில்தான் கடும்போட்டி. கால்பந்தின் சிறந்த விருதான பலோன் டி'ஆர் விருதை ஐந்து முறை வென்றுள்ளார்.
ரொனால்டோ கால்பந்து மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்து வரும் நிலையில், விளம்பரம் மூலமும் கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார். இவர் 2015-ம் ஆண்டு வரை இரினா ஷாய்க் என்ற பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தார்.
இரினாவுடனான ஐந்து வருட தொடர்பை முறித்துக் கொண்ட பின் அதன்பின், 2016-ல் இருந்து ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் என்பவருடன் பழக தொடங்கினார். தற்போது வரை ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் ரொனால்டோ வாழ்ந்து வருகிறார். திருமணம் செய்யாமல் ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் உடன் குடும்பம் நடத்தி வரும் ரொனால்டோவு்கு கடந்த 2017-ல் அலானா மார்ட்டினா என்ற குழந்தை பிறந்தது.
கடந்த அக்டோபர் மாதம் விரைவில் இரட்டை குழந்தை பெற்றெடுக்கப் போகிறேன் என ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் தெரிவித்திரந்தார். விரைவில் அவர்களுக்கு இரட்டை குழந்தை பிறக்க இருக்கிறது.
அர்ஜென்டினாவை பூர்விகமாக கொண்ட ஜார்ஜியா, பின்னர் ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் குடியேறினார். ரியல் மாட்ரிட் அணிக்காக ரொனால்டோ விளையாடும்போது, உள்ளாடை மாடலிங் செய்து வந்த ஜார்ஜியாவுக்கு, ரொனால்டோவின் நட்பு கிடைத்தது. அதில் இருந்து இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.
இணைய தளம் ஒன்று ஜார்ஜினாவை வைத்து டாக்குமெண்டரி படம் எடுத்தது. அதில், தான் மிகவும் கஷ்டமான நிலையில் இருந்து, தற்போது சொகுசான வாழ்க்கைக்கு திரும்பியுள்ளேன் என்பதை விவரித்துள்ளார்.
ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் டாக்குமெண்டரியில் ‘‘என்னுடைய மாட்ரிட் வருகை மிகவும் பயங்கரமாக இருந்தது. மிகவும் குறைந்த வாடகையில் மலிவான பிளாட் கிடைக்குமா? என்ற எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். மாத வாடகை 250 யூரோவிற்குள்தான் இருக்க வேண்டும் என்று எண்ணினேன். இறுதியாக ஒரு பிளாட்டில் ஸ்டோரேஜ் ரூம் கிடைத்தது. குளிர்காலத்தில் மிகவும் குளிராக இருக்கும். கோடைக்காலத்தில் சமாளிக்க முடியாத அளவில் வெப்பமாக இருக்கும்.
கிறிஸ்டியானோ ரொனால்டோவை சந்தித்த நாளில் இருந்து என்னுடைய வாழ்க்கை மாறியது. செர்ரானோவில் நான் முன்னதாக கைப்பை விற்றுக் கொண்டிருந்தேன். தற்போது அவற்றை வாங்கி குவிக்கிறேன்.
நாம் எங்கிருந்து வந்தமோ, அந்த பாதையை மறந்து விடக்கூடாது. இது மிகவும் முக்கியமானது. குழந்தைகளை நினைக்கும்போதெல்லாம் உணர்ச்சிவசப் படுவேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.
ஜார்ஜினா ரோட்ரிக்ஸின் டாக்குமென்டரி ஜனவரி 28-ந்தேதி ரிலீஸ் ஆகிறது.
மேலும் விளையாட்டுச் செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்