இலங்கை மக்கள் வங்கியை கறுப்பு பட்டியலில் இருந்து நீக்கியது சீனா !

#SriLanka
Nila
2 years ago
இலங்கை மக்கள் வங்கியை கறுப்பு பட்டியலில் இருந்து நீக்கியது சீனா !

சீன தூதரகத்தின் பொருளாதாரம் மற்றும் வணிக பிரிவு, மக்கள் வங்கியை கறுப்பு பட்டியலிலிருந்து விடுவித்துள்ளது.

சீனாவில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட உரத்திம், தீங்கு விளைவிக்கும் பக்றீரியா உள்ளதாக கூறி அதனை நிராகரிப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்திருந்தது.

இந்த நிலையில், அதற்கான பணத்தை செலுத்த மக்கள் வங்கி பின்வாங்கிய நிலையில், மக்கள் வங்கியை கறுப்பு பட்டியலுக்குள் உள்வாங்க சீன தூதரகம் நடவடிக்கை எடுத்திருந்தது.

அதனைத் தொடர்ந்து, இரண்டு தரப்பினரும் நீதிமன்றில் இணக்கப்பாட்டை எட்டிய நிலையில், மக்கள் வங்கி 6.9 மில்லியன் அமெரிக்க டொலரை கடந்த 7ம் திகதி மக்கள் வங்கி செலுத்தியிருந்தது.

இதனைத் தொடர்ந்து, சீன வெளிவிவகார அமைச்சர் வாங்யி, கடந்த 8ம் திகதி நாட்டிற்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.இவ்வாறான பின்னணியிலேயே, மக்கள் வங்கியை கறுப்பு பட்டியலிலிருந்து சீன விடுவித்துள்ளது.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்