5 இலட்சத்துக்கு அரசாங்கத்தினால் வீடு!

Prabha Praneetha
2 years ago
 5 இலட்சத்துக்கு அரசாங்கத்தினால் வீடு!

சொந்துரு மஹல்´ எனும் வீடமைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவும், இவ்வேலைத்திட்டத்தின் முன்னோடிக் கருத்திட்டமாக தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான ரன் பொக்குன கமவில் அமைந்துள்ள காணித்துண்டில் 72 வீடுகளை அமைப்பதற்கும் அமைச்சரை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வீடு அல்லது வீடமைப்பதற்கு காணியொன்று இல்லாமையால் வாடகை வீடுகளில் வாழ்கின்ற, உண்மையான வீட்டுத் தேவையுள்ள குறைந்த மற்றும் நடுத்தர வருமானங் கொண்ட குடும்பங்களுக்கு நியாய விலைக்கு நிரந்தர வீடுகளை வழங்கும் நோக்கில் ´சொந்துரு மஹல்´ எனும் பெயரிலான வீடமைப்புத் திட்டத்தை தேசிய வீடமைப்பு அதிகாரசபை மூலம் நடைமுறைப்படுத்துவதற்கு கிராமிய, வீடமைப்பு மற்றும் கட்டுமானங்கள் கட்டிடப்பொருட்கள் கைத்தொழில் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சு திட்டமிட்டுள்ளது.

இவ்வேலைத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்படும் பயனாளிகளுக்கு 500,000/- ரூபாய்கள் ஆரம்பத் தொகையாகச் செலுத்துவதற்கான ஆற்றல் இருக்க வேண்டியதுடன், வீட்டுப் பெறுமதியின் எஞ்சிய தொகை வருடமொன்றில் தவணைக் கட்டணமாக அறவிடப்படும்.

தேவைக்கேற்ப வங்கியின் மூலம் கடனைப் பெற்றுக்கொள்வதற்கும், தெரிவு செய்யப்படும் பயனாளிகளுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

அதற்கமைய, குறித்த வீடமைப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவும், இவ்வேலைத்திட்டத்தின் முன்னோடிக் கருத்திட்டமாக தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான ரன் பொக்குன கமவில் அமைந்துள்ள காணித்துண்டில் 72 வீடுகளை அமைப்பதற்கும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்