பாடகி லதா மங்கேஷ்கருக்கு கொரோனா
Prabha Praneetha
2 years ago
பாடகி லதா மங்கேஷ்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா பரவலின் மூன்றாவது அலை காரணமாக இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2 இலட்சத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் நேற்று மட்டுமே 13,000 பேருக்கு மேல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, நடிகர்கள் மகேஷ் பாபு, சத்யராஜ், வடிவேலு, அருண் விஜய், விஷ்ணு விஷால் நடிகைகளில் த்ரிஷா, மீனா, குஷ்பு உள்ளிட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், பாடகி லதா மங்கேஷ்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
92 வயதாகும் அவர், மும்பையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் தமிழ் சினிமா தொடர்பான தகவல்களுக்கு இதில் கிலிக் செய்யுங்கள்.