6 மாதங்களுக்கு தேவையான மருந்துகள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை

Prathees
2 years ago
 6 மாதங்களுக்கு தேவையான மருந்துகள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை

எதிர்வரும் 6 மாதங்களுக்கு தேவையான மருந்துகள் தொடர்பில் முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

வருடத்திற்கு நாட்டுக்குத் தேவையான மருந்துப் பொருட்களை வழங்குவது தொடர்பில் சுகாதார அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

உலகளாவிய தொற்றினால் தடைகள் ஏற்பட்டுள்ள போதிலும் மக்களுக்குத் தேவையான மருந்துகளை தட்டுப்பாடு இன்றி வழங்குவதுடன் அரசாங்கம் இதில் முன்னுரிமை கொடுக்க வேண்டுமென அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய மருந்துகள் தொடர்பில் கவனத்துடன் இறக்குமதி செய்ய வேண்டும் எனவும், அதற்கான மருந்துகள் குறித்து முறையான ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் சில மருந்துகள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்ற போதிலும் வெவ்வேறு வர்த்தகநாமங்களில் வெளியிடப்படும் மருந்துகளுக்கு மக்கள் பழகியமையினால் ஒரே மாதிரியான பல்வேறு வர்த்தகநாமங்களின் மருந்துகளை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்