வடக்கில் நெல் கொள்வனவுக்காக வட்டியற்ற கடன்!

Mayoorikka
2 years ago
வடக்கில் நெல் கொள்வனவுக்காக வட்டியற்ற கடன்!

வடமாகாணத்திலுள்ள கூட்டுறவு அரிசி ஆலைகளின் ஊடாக நெல் கொள்வனவுக்காக 15 மில்லியன் ரூபாய் வட்டியற்ற கடன் வழங்கப்பட்டுள்ளதாக வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் மு.நந்தகோபன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வடமாகாணத்தில் கூட்டுறவு சங்கங்கள் ஊடாக அரிசியினை தொடர்ந்து விநியோகிப்பதற்காக தெரிவு செய்யப்பட்ட கூட்டுறவு அரிசி ஆலைகளுக்கு 6 மாத கால வட்டியில்லா கடன் அடிப்படையில் குறித்த நிதி வழங்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கத்தின் அரிசி ஆலைகளான கரைச்சி தெற்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு 4 மில்லியன், கராச்சி வடக்கு கூட்டுறவு சங்கத்திற்கு 2மில்லியன், பூநகரி கூட்டுறவுச் சங்கத்திற்கு 1மில்லியன் ஒதுக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைத்துறைப்பற்று கூட்டுறவுச் சங்கத்தின் அரிசி ஆலைக்கு 5 மில்லியனும் வவுனியா வடக்கு கூட்டுறவுச் சங்கத்தின் அரசியலுக்கு 3 மில்லியனும் முதற்கட்டமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

வழங்கப்பட்ட நிதியைப் பெற்றுக் கொண்ட பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் அரிசி ஆலைகள் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்து அரிசியாக்கி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு வழங்க வேண்டும்.

ஆகவே இவ்வாறு விவசாயிகளிடமிருந்து கூட்டுறவுச் சங்கங்களின் அரிசி ஆலைகளுக்கு தொடர்ந்தும் நெல் கொள்வனவு செய்வதற்காக மாகாண நிதி மற்றும் கூட்டுறவு நிதி ஆகியவற்றின் மூலம் கொள்வனவு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்