இலங்கையில் மீண்டும் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி?

#SriLanka #Ajith Nivat Cabral
Nila
2 years ago
 இலங்கையில்  மீண்டும் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி?

நாட்டுக்கு அந்நிய செலாவணி கிடைக்கப்பெற்று, பொருளாதார நிலைமை வழமைக்கு திரும்பியதன் பின்னர் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு மீண்டும் அனுமதி வழங்க வாய்ப்பு இருப்பதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

வாகன இறக்குமதியை இடைநிறுத்துவது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வாகனங்கள் மற்றும் ஓடுகள் தவிர அத்தியாவசியமற்ற அனைத்து பொருட்களும் தற்போது இறக்குமதி செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் பெருமளவிலான அந்நிய செலாவணி நாட்டை விட்டு வெளியேறுவதாகவும் மத்திய வங்கி ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், நாட்டிற்கு பெருமளவிலான அந்நியச் செலாவணியைத் பெற்றுத்தரக்கூடிய சுற்றுலாத்துறை போன்ற துறைகளில் எதிர்வரும் மாதங்களில் ஸ்திரத்தன்மையினை ஏற்படுத்துவதன் மூலம் வாகனங்களை மீண்டும் இறக்குமதி செய்ய அனுமதி வழங்க முடியும் என தாம் நம்புவதாக அஜித் நிவார்ட் கப்ரால் குறிப்பிட்டுள்ளார்.
 

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்