இந்த மாதத்தில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும்! அமைச்சர் வெளியிட்ட தகவல்

Mayoorikka
2 years ago
இந்த மாதத்தில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும்! அமைச்சர் வெளியிட்ட தகவல்

இந்த மாதத்தில் எந்த நேரத்திலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

எரிவாயு கப்பல்கள் 3 துறைமுகத்தில் தரித்து நிற்கின்றது. எனினும் அதனை பெற்றுக் கொள்வதற்கு டொலர் இல்லாத பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

சீனாவிடம் 300 மில்லியன் டொலர் கடன் பெற்றோம், இந்தியாவிடம் 400 மில்லியன் டொலர் கடன் பெற்றோம், பங்களாதேஷிடம் 250 மில்லியன் டொலர் கடன் பெற்றோம், எனினும் இந்த ஒன்றுமே ஒரு மாதத்திற்கு போதுமான எரிபொருள் பெறுவதற்கு போதுமானதாக இல்லை.

இந்த நிலையில், எரிபொருள் தட்டுப்பாடு அபாயத்தைத் தவிர்ப்பதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதும் ஜனவரி மாதத்தில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்