43 இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு
Prabha Praneetha
4 years ago
இந்திய மீனவர்கள் 43 பேரின் விளக்கமறியல் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
நெடுந்தீவு அருகே கடந்த வருடம் டிசம்பர் 19 ஆம் திகதி சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் 43 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதுடன் 6 படகுகளும் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஊர்காவற்றுறை நீதிமன்றில் இந்த வழக்கு எடுக்கப்பட்ட நிலையில், இவர்களுக்கான விளக்கமறியலை ஜனவரி 27 ஆம் திகதி வரை நீடிக்க ஊர்காவற்றுறை நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே