செய்த தவறுகளை மீண்டும் செய்ய வேண்டாம் - காதல் விதிகள் - பாகம் - 4
காதல் விதிகள்
செய்த தவறுகளை மீண்டும் செய்ய வேண்டாம்
இது மிகவும் சாதாரண விஷயம் என்று தோன்றலாம் . ஆனால் பல புத்திசாலிகள் இதையே மீண்டும் மீண்டும் செய்வார்கள் . உங்கள் முன்னாள் காதலர் மகிய பெரிய கொடுமைக்காரனாக இருந்திருந்தால் , அவனை போல் தெரிபவர்களிடம் இருந்து ஆயிரம் தள்ளி இருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள்தானே ? ஆனால் அடிமனதில் , அவனை போலவே இருக்கும் மற்றொருவனை
நாடிதான் நீங்கள் போய்க்கொண்டு இருப்பீர்கள் .
ஆழப்பதிந்த நடைமுறைகளை மாற்றிக்கொள்வது கஷ்டம்தான். அப்படி இல்லை என்று நான் சொல்ல போவதில்லை . இதில் முக்கியமானது என்னவென்றால் , எந்தவிதமான வடிவத்தை நாம் பின்பற்றுகிறோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும் . அதன் பின்னர் , இந்த சிக்கலில் எப்படி மாட்டிக்கொண்டீர்கள் என்று கண்டுபிடிக்க வேண்டும் . ஒரு வகையில் , அப்படி கண்டுபிடிப்பது கூட அவ்வளவு முக்கியமில்லை. உங்களுடைய இந்த நடத்தை எங்கிருந்து வந்தது என்று கண்டுபிடிப்பது உபயோகமாக இருக்கும் .
இதன் பிறகு, தோற்று , போகும் என்று உங்களுக்கே நன்கு தெரிந்த தோல்விபெறும் உறவுகளை நீங்கள் உருவாக்கிக்கொள்ள வேண்டுமா என்று நீங்கள் முடிவெடுக்க வேண்டும் வேண்டாமில்லையா?அப்படியானால், இந்த வடிவத்தில் இனி வரும் எந்த உறவையும் ஏற்பதில்லை என்று தீர்மானம் எடுத்துக்கொள்ள வேண்டு,. ஒவ்வொரு முறையும் இது வேறுவிதமான உறவு என்று உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ள கூடாது .
ஆனால் , உங்கள் இருவருக்கும் மகிழ்ச்சியை தரும் நீண்ட கால உறவு வேண்டும் என்றால், இதை தவிர வேறு வழியில்லை . இந்த வடிவத்தை உடைக்க நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டாலும், அது உண்மையில் பிற்காலத்தில் பயனுடையதாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை .
மேலும் காதல் விதிகள் தகவல்களை பார்வையிட இதில் கிளக் செய்யுங்கள்.