ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகளை மருத்துவமனைக்கு அனுப்பிய விபத்து

#Accident
Prathees
4 years ago
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகளை மருத்துவமனைக்கு அனுப்பிய விபத்து

கொழும்பு- கஹதுடுவ, பொல்கசோவிட்ட பிரதேசத்தில் இன்று (13) காலை ஒரே குடும்பத்துடன் பயணித்த முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதாக பொலிஸார்தெரிவித்தனர்.

அதிவேகமாகச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்று வீதியைக் கடத்துச் சென்று மின்கம்பத்தில் மோதி உள்ளது.

தாயும் மகளும் பலத்த காயங்களுடன் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கர வண்டியின் சாரதியான தந்தையும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹொரணையில் இருந்து கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்த முச்சக்கர வண்டி வேகம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4