லிட்ரோ நிறுவனம்: மீண்டும் அவரே தலைவர்

Mayoorikka
4 years ago
லிட்ரோ நிறுவனம்: மீண்டும் அவரே தலைவர்

இன்று காலை பதவி நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெசார ஜயசிங்க, மீண்டும் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் நிதியமைச்சின் செயலாளருக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெசார ஜயசிங்க உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவி நீக்கப்படுவதாகவும் புதிய தலைவராக ரேணுக ​பெரேரா நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்து, நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகலவால் இலங்கை காப்புறுதி கூட்டுதாபனத்துக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஜனாதிபதி மற்றும் நிதியமைச்சரின் ஆலோசனைக்கமைய பதவி நீக்கப்பட்ட அவர், மீண்டும் அவர்களின் ஆலோசனைக்கமைய லிட்ரோ நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4