நாய் சாப்பிட்ட நிலையில் சிசுவின் சடலம் மீட்பு: தாயைத் தேடும் பொலிஸார்

Prathees
4 years ago
நாய் சாப்பிட்ட நிலையில் சிசுவின் சடலம் மீட்பு: தாயைத் தேடும் பொலிஸார்

கைகால்கள் நாய் சாப்பிட்டநிலையில், சிசுவின் சடலமொன்று ரக்வான பொதுப்பிட்டிய ரம்புக பாடசாலைக்கு முன்பாக உள்ள வீதியில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொத்துப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 11ஆம் திகதி பிற்பகல் இந்த சடலம் தொடர்பில் அப்பகுதியிலுள்ள கிராம உத்தியோகத்தருக்கு கிடைத்த தகவலின்அடிப்படையில், பொத்துப்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளார்.

பொத்துப்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரஞ்சித் விஜயகுணவர்தன, குழந்தையின் உடல் உறுப்புகளை நாய்கள் தின்றுவிட்டதாகத் தெரிவதாக குறிப்பிட்டுள்ளார்.

சிசுவின் சடலம் தொடர்பில் இரத்தினபுரி நீதவான்  12ஆம் திகதி நீதவான் விசாரணைகளை மேற்கொண்டார்.

இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் தடயவியல் பரிசோதனை நடத்தப்பட உள்ளதாகவும், அதன் பின்னரே சடலத்தின் வயதை அறிய முடியும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலத்தை கொண்டு சென்றது யார் என்பது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், அப்பகுதியில் உள்ள குடும்ப நலப் பணியாளர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, குழந்தையைப் பெற்ற தாயைக் கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4