இன்று சுவையான கொள்ளுப்பொங்கல் பொங்கிப்பாருங்கள்.
#Cooking
#Vegetable
#Pongal
Mugunthan Mugunthan
2 years ago
தேவையான பொருட்கள் :
- கொள்ளு - 50 கிராம் (8 மணி நேரம் ஊற வைக்கவும்),
- பச்சரிசி - 100 கிராம்,
- மஞ்சள் தூள் - சிறிதளவு,
- பெருங்காயத் தூள், உப்பு - தேவையான அளவு.
தாளிக்க :
- நெய் - 2 ஸ்பூன்,
- மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்,
- இஞ்சி - சிறிதளவு,
- பச்சை மிளகாய் - 2,
- கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு.
செய்முறை :
- இஞ்சியை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும். ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- கொள்ளு, அரிசி இரண்டையும் நன்றாக கழுவி தனித்தனியே தளர வேக விடவும்.
- வெந்த கொள்ளு, அரிசியை ஒன்றாக சேர்த்து அதனுடன் உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு மசிக்கவும்.
- கடாயை அடுப்பில் வைத்து சிறிது நெய் ஊற்றி சூடானதும் மிளகு, சீரகம், இஞ்சி, ப.மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி கொள்ளு கலவையில் சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.
- சூப்பரான கொள்ளு காரப் பொங்கல் ரெடி
மேலும் சமையல் குறிப்புகளை பார்வையிட இதில் கிலிக் செய்யுங்கள்.