இலங்கை தொடர்பில் ஐநா விடுத்துள்ள எச்சரிக்கை

Prabha Praneetha
2 years ago
இலங்கை தொடர்பில் ஐநா விடுத்துள்ள எச்சரிக்கை

கோவிட் வைரஸ் பரவலின் விளைவாக ஏற்பட்ட நெருக்கடிகளின் தொடர்ச்சியாக இவ்வருடம் உணவுப்பற்றாக்குறை, வெளிநாட்டுக்கையிருப்பு வீழ்ச்சி, உயர் கடன் இடர் உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு இலங்கை முகங்கொடுக்கக் கூடும் ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக விவகாரத்திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள 2022 ஆம் ஆண்டிற்கான உலக பொருளாதார நிலைவரம் மற்றும் வாய்ப்புக்கள் தொடர்பான அறிக்கையில் உலகளாவிய ரீதியில் பொருளாதார இயங்குகையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள காரணிகள் குறித்து விபரிக்கப்பட்டுள்ளது.

கோவிட் - 19 வைரஸ் பரவலின் புதிய அலைகள், தொழிற்சந்தையில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள், விநியோக முறைகளில் ஏற்பட்டுள்ள சவால்கள், அதிகரித்துச்செல்லும் பணவீக்கத்தினால் ஏற்பட்டுள்ள அழுத்தங்கள் போன்ற காரணிகள் அவ்வறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் இலங்கையைப் பொறுத்தமட்டில் 2022 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.6 சதவீதமாக அமையக்கூடும் என்று மதிப்பீடு செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக விவகாரத்திணைக்களம், இவ்வாண்டில் உணவுப்பற்றாக்குறை, வெளிநாட்டுக்கையிருப்பு வீழ்ச்சி, உயர் கடன் இடர் உள்ளிட்ட முக்கிய சவால்களுக்கு இலங்கை முகங்கொடுக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.  

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்