மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பகுதி பொதுமக்களின் பாவனைக்கு

Prathees
2 years ago
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பகுதி பொதுமக்களின் பாவனைக்கு

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம முதல் குருநாகல் வரையிலான பகுதி இன்று (15) பொதுமக்களின் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் வைபவம் இடம்பெறவுள்ளது.

மீரிகம முதல் குருநாகல் வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டப் பகுதி 40.91 கிலோமீற்றர் நீளமானது.

விரைவுப் பாதையின் சுற்றுச்சூழல் மற்றும் சமூகப் பாதிப்பைக் குறைக்கும் வகையில், நகர்ப்புறங்களைத் தவிர்த்து, முக்கியமாக காலி நிலங்கள் வழியாக இந்த அதிவேகப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

நான்கு வழிச்சாலையின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த வீதிப் பகுதி மீரிகமவிலிருந்து குருநாகல் வரையிலான பகுதி இலங்கையின் மிக அழகிய அதிவேக நெடுஞ்சாலைப் பிரிவாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

மீரிகம, நாகலகமுவ, தம்பொக்க, குருநாகல் மற்றும் யக்கபிட்டிய ஆகிய இடங்களில் பணம் செலுத்தும் கவுன்ட்டர்களுடன் ஐந்து பரிமாற்ற மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதற்காக 137 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்