நடிகை பானுப்பிரியா பிறந்த நாள். 15-01-2022.

#history #Actress #today
நடிகை பானுப்பிரியா பிறந்த நாள். 15-01-2022.

பானுப்ரியா (தெலுங்கு: భానుప్రియ ) ஒரு இந்திய நடிகை. இவர் 1980 முதல் – 1993 வரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தார். இவர் 1990-களில் சில இந்தித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

ஆரம்ப காலம்

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ராஜமுந்திரியில் ஜனவரி 15, 1966 வருடம் பிறந்த இவர், இளமைக் காலம் முதல் சென்னையில் வசித்து வருகிறார்.

இவருடைய தங்கை நிஷாந்தி, (சாந்திப்பிரியா) என அறியப்பட்ட இவர், பல திரைப்படங்களில் நடித்துள்ளார். நிஷாந்தி எங்க ஊரு பாட்டுக்காரன் (1988) திரைப்படம் மூலமாக பிரபலமானார். நிஷாந்தி 2002-ம் ஆண்டு தொலைக்காட்சித் தொடரான ஆர்யமான்-லும், நடித்தார். பானுப்ரியாவின் மற்றொரு தங்கையான ஜோதிப்ரியாவும் தொலைக்காட்சிகளிலும், திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

தொழில் வாழ்க்கை

பானுப்ரியா பல மொழிகளில் சுமார் 111-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கில் 55 திரைப்படங்களிலும், தமிழில் 40-க்கும் மேற்பட்டத் திரைப்படங்களிலும், 14 இந்தித் திரைப்படங்களிலும் மற்றும் சில மலையாள மற்றும் கன்னடத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் தன்னுடைய 17-வது வயதில் நடிக்க ஆரம்பித்தார். இவருடைய முதல் தமிழ்த் திரைப்படம், மெல்ல பேசுங்கள் 1983-ம் ஆண்டு வெளியானது. தெலுங்கில் இவர் நடித்த முதல் திரைப்படம் சித்தாரா (1983).

பரத நாட்டியத்தில் சிறந்து விளங்கியதால், பெரும்பாலான இவருடையத் திரைப்படங்களில் நடனமாடும் கதாப்பாத்திரமாகவே அமைந்தது. இவருடைய நடிப்பும் நடனமும் சக கலைஞர்களால் பாராட்டப்பட்டது. இவர் தற்போது பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருகிறார். இவர் தன்னுடைய கண்களால் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் சிறந்து விளங்கினார். அதன்காரணமாக இவருடைய ஐ-டெக்ஸ் (Eyetex) விளம்பரமானது மிகவும் பிரபலம்.

சொந்த வாழ்க்கை

அமரிக்காவைச் சேர்ந்த விருதுபெற்ற புகைப்படக்கலைஞரும், பிரபல பரதநாட்டிய கலைஞரான சுமதி கவுசலின் மகனுமான ஆதர்ஷ் கவுசல், என்பவரை பானுப்ரியா திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள். தற்போது சென்னையில் வசித்து வருகின்றனர்.

தொலைக்காட்சிகளில்

  • விசுவாமித்ரா – தூர்தர்ஷன் தொடர்
  • பெண் – சுஹாசினி இயக்கிய தொடர்
  • சக்தி – சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது
  • வாழ்க்கை – சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது
  • பொறந்த வீடா புகுந்த வீடா – சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது
  • தக திமி தா – ஜெயா தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சி
  • ஆஹா – ஜுன் 7, 2012 முதல் விஜய் தொலைக்காட்சியில்

விருதுகள்

  • 1988-ம் வருடத்திற்கான, சுவர்ன கமலம் திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான நந்தி விருது
  • 1988-ம் வருடத்திற்கான, சுவர்ன கமலம் திரைப்படத்திற்காக பிலிம்பேர் விருது
  • 1989-ம் வருடத்திற்கான, ஆராரோ ஆரிராரோ திரைப்படத்திற்காக தமிழ் நாடு மாநில அரசின் சிறப்பு விருது
  • 1991-ம் வருடத்திற்கான, அழகன் திரைப்படத்திற்காக தமிழ் நாடு மாநில அரசின் சிறப்பு விருது
  • 1996-ம் வருடத்திற்கான, பெத்தராயுடு திரைப்படத்திற்காக சினிமா எக்ஸ்பிரஸ் விருது
  • 2002-ம் வருடத்திற்கான, லஹிரி லஹிரி லஹிரிலோ திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான நந்தி விருது
  • 2005-ம் வருடத்திற்கான, சத்ரபதி திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான நந்தி விருது

நடித்த திரைப்படங்கள்

1983    மெல்ல பேசுங்கள்
1985    தென்றல் தொடாத மலர்
1989    ஆராரோ ஆரிராரோ
1990    சிறையில் பூத்த சின்ன மலர்
1991    புது மனிதன்
1991    கோபுர வாசலிலே
1991    சத்ரியன்
1991    பொன்டாட்டி சொன்னா கேட்கனும்
1991    அழகன்
1991    பிரம்மா
1991    தளபதி
1991    தைப்பூசம்
1992    மகுடம்
1992    பரதன்
1992    தெற்கு தெரு மச்சான்
1992    சுந்தர காண்டம்
1992    பங்காளி
1992    அமரன்
1992    காவிய தலைவன்
1992    வானமே எல்லை
1992    நீங்க நல்லா இருக்கனும்
1993    கட்டளை
1993    பொறந்த வீடா புகுந்த வீடா
1993    மகராசன்
1993    முற்றுகை
1993    கோகுலம்
1993    உழவன்
1993    ராஜ துரை
1995    சக்ரவர்த்தி
1998    தலைமுறை
1998    ஆஹா
1999    என்றென்றும் காதல்
1999    ஆனந்த பூங்காற்றே
2000    Annai
2001    ஸ்ரீ ராஜராஜேஷ்வரி
2001    தாலி காத்த காளியம்மன்
2002    நைனா
2004    ஜெய்
2004    ஜோர்
2004    செல்லமே
2007    ஒரு பொன்னு ஒரு பையன்
2007    பொல்லாதவன்
2008    தீக்குச்சி
2012    என் பெயர் குமாரசாமி
2012    3

மேலும் வரலாறு தகவல்களை பார்வையிட இதில் கிலிக் செய்யுங்கள்

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!