கொழும்பில் சந்திரிகா' நூல் வெளியீடு! - முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு (photos)

Reha
2 years ago
கொழும்பில் சந்திரிகா' நூல் வெளியீடு! - முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு (photos)

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவைப் பற்றி எழுதப்பட்ட நூல் நேற்று கொழும்பில் வௌியிடப்பட்டது.

தரிந்து தொட்டவத்தவால் தொகுக்கப்பட்டுள்ள இந்த நூல், சந்திரிகா எனப் பெயரிடப்பட்டுள்ளது.

நூல் வௌியீட்டு விழாவில் அரசியல் பிரமுகர்கள், கலைஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

முன்னாள் ஜனாதிபதியின் பிரத்தியேக வாழ்க்கை மற்றும் அரசியல் வாழ்க்கையின் முக்கியமான பல தருணங்களை உள்ளடக்கி இந்த நூல் படைக்கப்பட்டுள்ளது.

நான்கு வருட காலம் முன்னெடுக்கப்பட்ட தேடலின் பயனாகவே நேற்று இந்த நூல் சாத்தியமாகியுள்ளது.

வௌியீட்டு வைபவத்தில் முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க சிறப்புரை ஆற்றினார்.

இதன்போது, சந்திரிகா ஜனாதிபதியாக இருந்த காலத்தில் நீதித்துறையின் சுதந்திரம் பாதுகாக்கப்பட்டது எனச் ஷிராணி பண்டாரநாயக்க குறிப்பிட்டார்.

2013 ஜனவரியில் நீதித்துறை சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களின் பின்னர் சந்திரிகா மீதான மதிப்பும் மரியாதையும் மென்மேலும் உயர்ந்தது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்