கிரீன் சில்லி சிக்கன் செய்வது எப்படி?
#Cooking
#Chicken
#chilies
Mugunthan Mugunthan
2 years ago
தேவையான பொருட்கள்:
- சிக்கன் - 1 கிலோ
- பச்சை மிளகாய் - 1 கப் (சிறியது)
- வெங்காயம் - 2 (நறுக்கியது)
- பூண்டு - 10 பற்கள்
- இஞ்சி - 1 துண்டு
- கொத்தமல்லி - 1/2 கப் (நறுக்கியது)
- உப்பு - தேவையான அளவு
- மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
- மல்லி தூள் - 2 டீஸ்பூன்
- வறுத்த சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
- கரம் மசாலா - 1 டீஸ்பூன்
- சீரகம் - 1 டீஸ்பூன்
- எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
- முதலில் மிக்ஸியில் வெங்காயம், பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி மற்றும் 3 பச்சை மிளகாய் போட்டு, தண்ணீர் சிறிது உப்பு, உப்பு சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
- பின்னர் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி, அதில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து பிரட்டி 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
- பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகத்தை சேர்த்து தாளித்து, பின் பச்சை மிளகாய், உப்பு சேர்த்து, பச்சை மிளகாயின் நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
- பின்பு அதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து மிதமான தீயில் 6-7 நிமிடம் நன்கு பிரட்டி, பின் மல்லி தூள், சீரகப் பொடி, மஞ்சள் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு பிரட்டி, 3-4 நிமிடம் நன்கு வேக வைக்க வேண்டும்.
- பின் மூடி வைத்து, குறைவான தீயில் 10-15 நிமிடம் சிக்கனை நன்கு வேக வைத்து இறக்கினால், க்ரீன் சில்லி சிக்கன் ரெடி!!!
மேலும் சமையல் குறிப்புகளை பார்வையிட இதில் கிலிக் செய்யுங்கள்.