யாழ்ப்பாண வைத்திய சேவையின் மகுடம் இறையடி சேர்ந்தார்

Nila
2 years ago
யாழ்ப்பாண வைத்திய சேவையின் மகுடம் இறையடி சேர்ந்தார்

1958 ம் ஆண்டு வைத்தியராக கடமையை தொடர்ந்த வைத்தியர் சிதம்பரநாதன் ஆறு தசாப்தங்களாக இலங்கையின் பல்வேறு வைத்தியசாலைகளில் கடமையாற்றி இன்று இறைவனடி சேர்ந்தார். 

இவரது மகத்தான வைத்திய சேவைகளை 16 வருடங்களாக சிலோன் மருத்துவ கூட்டுத்தாபனத்திலும் , மேலும் ரத்தினபுரி பலாங்கொட வைத்தியசாலையிலும், மன்னாரின் மடு, அடம்பன் மருத்துவமனைகளிலும்,

மேலும் திருகோணமலை கந்தளாய் வைத்தியசாலையிலும், குருநாகலையில் கண்டாவ மருத்துவமனையிலும், யாழ்ப்பாணத்தில் மருதங்கேணி வைத்தியசாலையிலும், இறுதியாக கிளிநொச்சியில் அமைந்துள்ள சில மருத்துவமனைகளிலும் தனது கடமைகளை திறம்பட செய்த ஒரு மகத்தான மருத்துவர் ஆவார்.

63 வருட கால சேவையில் பல்லாயிரக்கணக்கான உள்ளங்களைக் கவர்ந்தவர்.

தன்னுடைய 90 வது வயதில் வைத்தியராக கடமை புரிந்தவர் என்பதும் ஆச்சரியத்திற்குரியது.

தன்னிடம் வருபவர்களிடம் எப்போதும் அன்புடனும் ஆதரவுடனும் நடந்து கொள்ளும் வைத்தியரைப்  பார்த்தால் போதும் என பலர் அவரை நாடிச் செல்வார்கள்.

வருமுன் காக்கும் பல ஆலோசனைகளை எப்போதும் எடுத்துரைக்க தயங்கமாட்டார்.

கிளிநொச்சி மாவட்ட சுகாதாரத்துறை உத்தியோகத்தர்களின் மனங்களில் நீங்கா இடம் பெற்றவர்.

இவ்வாறான உள்ளம் கொண்ட மருத்துவர் இன்று இறையடி சேர்ந்தது பலரையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது.