அம்பாறையில் குப்பை மேட்டில் உயிரிழந்து கிடந்த இரு யானைகள்

Prathees
2 years ago
அம்பாறையில் குப்பை மேட்டில் உயிரிழந்து கிடந்த இரு யானைகள்

அம்பாறை மாவட்டத்தில் உள்ள பள்ளக்காடு கிராமத்தில் உள்ள குப்பை மேட்டில் பிளாஸ்டிக் குப்பைகளை யானைகள் உண்பது நீண்டகாலமாக பிரச்சினையாக இருந்து வருகின்றது.

இந்த நிலையில், கடந்த வார இறுதியில் மேலும் இரண்டு யானைகள் இறந்து கிடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 8 ஆண்டுகளில் குப்பைகளை சாப்பிட்ட 20 யானைகள் உயிரிழந்துள்ளன.

இலங்கையின் கிழக்குப் பகுதியில் உள்ள திறந்தவெளி குப்பைக் கிடங்கில் இருந்து வெளியேறும் பிளாஸ்டிக் கழிவுகள், அப்பகுதியில் உள்ள யானைகளைக் கொல்லக்கூடும் என்று பாதுகாவலர்களும் கால்நடை மருத்துவர்களும் நீண்டகாலமாக எச்சரித்து வருகின்றனர்.

இறந்த விலங்குகளை பரிசோதித்த போது, ​​குப்பை கிடங்கில் இருந்து பெருமளவிலான அழியாத பிளாஸ்டிக்கை விழுங்கியதாக வனவிலங்கு கால்நடை மருத்துவர் நிஹால் புஸ்பகுமார தெரிவித்தார்.

பொலித்தீன், உணவுப் பொதிகள், பிளாஸ்டிக், மற்ற ஜீரணிக்க முடியாத பொருட்கள் மற்றும் தண்ணீர் மட்டுமே பிரேத பரிசோதனையில் பார்த்தோம்.யானைகள் சாப்பிட்டு ஜீரணிக்கும் சாதாரண உணவு தெளிவாக தெரியவில்லை என அவர் தெரிவித்தார்.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்