சிம்புவிற்கு கொடுக்கப்பட்ட டாக்டர் பட்டம் சரியா? தவறா? (Video)

Nila
2 years ago
சிம்புவிற்கு கொடுக்கப்பட்ட டாக்டர் பட்டம் சரியா? தவறா? (Video)

சிம்புவிற்கு கொடுக்கப்பட்ட டாக்டர் பட்டம் சரியா? தவறா?

அலசுவோம் வாருங்கள்...!

சில நாட்களுக்கு முன்பாக அனைத்து மீடியாக்களுக்கும் முதன்மை செய்தியாக வலம் வந்தது சிம்புவின் டாக்டர் பட்ட விவகாரம்.

அந்த நிகழ்வுக்கு வந்த பிரமுகர்களில் இருந்து, துணைவேந்தருக்கு அருகில் நின்று பரிசில்களை எடுத்துக் கொடுத்த பெண்ணையும் அனைத்து மீடியாக்கழும் கூறுபோட்டு செய்தியாக்கினார்கள். 

அங்கே நின்ற பெண்ணை சிம்புவின் இல்லத்தரசியாகவும் முடிச்சுப்போட மீடியாக்கள் தவறவில்லை.

அது ஒருபுறம் இருக்க, 

ராஜேந்தர் மற்றும் மனைவி உஷாவும் கண்ணீர் மழை பொழிய சிம்புவை டாக்டர் பட்டத்தோடு வாரித்தழுவி, அன்பு முத்தமிட்டு வாழ்த்தியதும். இப்பட்டத்தை கொடுத்த பல்கலைக்கழக உரிமையாளரை கட்டித்தழுவி ராஜேந்தர் நன்றி தெரிவித்ததும் படமாக ஒட்டிக்காட்டியது ஊடகங்கள்.

சரி நாம் எமது கோணத்தில் விடயத்துக்கு வருவோம்.

இந்த பட்டம் சிம்புவிற்க்கு எதற்காக கொடுக்கப்பட்டது?
எதற்காக சிம்புவை விட திறமைசாலியான அப்பா ரஜேந்தருக்கு கொடுக்காமல் சிம்புவிற்கு கொடுக்கப்பட்டது?
சிம்புவை விட திறமைசாலியாக பல நடிகர்கள் இருக்கும்போது, இயக்குநர்கள் இருக்கும்போது, எழுதாளர்கள் இருக்கும்போது, கவிஞர்கள் இருக்கும்போது, பன்முகம் கொண்ட பலர் இருக்கும்போது சிம்புவை இந்த பல்கலைக்கழகம் ஏன் குறி வைத்தது?

ஆம்.. அதற்கான பதில் ஆச்சரியப்பட வைத்தது. அதுதான் சிம்புவின் நடிப்பில், கௌதமம் மேனன் இயக்கத்தில், எம் ஜீ ஆர் பல்கலைக்கழக உரிமையாளர் ஐஸ்வரி கணேஷன் தயாரிப்பில் வெளிவர இருக்கும் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தின் ப்ரோமோவாகத்தான் இந்த பட்டமளிப்பு விழா என்பது தெரிய வந்திருக்கிறது.

ராஜேந்திரத்தின் பேரத்தின் பிற்பாடு இப்படி ஒரு பட்டத்தை சிம்புவிற்கு படத்தின் தயாரிப்பாளரால் கொடுத்தால் அதுவும் சிம்புவிற்கு ஒரு விளம்பரத்தை அனைத்து மீடியாக்களினூடாகவும் இலவச விளம்பரத்தை எதிர் பார்த்தே நிறைவேற்றப்பட்டது.

அத்தோடு அவர்கள இரண்டு பக்கத்தில் விளம்பரத்தை எதிர்பார்த்ததாகவும், ஒன்று சாதகமாக மற்றும் சர்ச்சையின் ஊடாக இந்தப் படத்தின் பெயரை  மற்றவர்களிடையே பேச வைப்பது. 

இது ரஜனியின் பாணியில் நிகழ்த்தப்பட்டாலும், பெரிதாக பேசப்படவில்லை.

அதாவது சிம்புவை பலர் வாழ்த்தியிருந்த வேளையிலும், படத்தின் தயாரிப்பாளரால் அவரது பல்கலைக்கழகத்தால் கொடுக்கப்பட்டது என பலர் கூறப்படாமலே பேசப்படாத பொருளாக போய்விட்டது. 

அது இந்த குழுமத்துக்கு ஒரு தோல்வியே.

எப்படிப் பார்த்தாலும், இந்த சிம்புவிற்கு கொடுக்கப்பட்ட டாக்டர் பட்டம் ஒரு திரைப்படத்துக்கான விளம்பரத்துக்கு கொடுக்கபட்டதே தவிர சிம்புவின் திறமைக்கு கொடுக்கப்பட்டது அல்ல என்பது நிரூபணமாகியிருக்கிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!