இலங்கையில் ஐந்தாவது கொரோனா அலை உருவாகும் அபாயம்!

#SriLanka
Nila
2 years ago
இலங்கையில் ஐந்தாவது கொரோனா அலை உருவாகும் அபாயம்!

ஒமிக்ரோன் மாறுபாடு காரணமாக நாட்டில் ஐந்தாவது கொரோனா வைரஸ் அலை உருவாகும் அபாயம் இருப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

நீண்ட வார விடுமுறையில் இடம்பெற்ற பொது கூட்டங்கள் மற்றும் ஒன்றுகூடல்கள் காரணமாக அடுத்த இரண்டு வாரங்களில் நாளாந்தம் பதிவாகும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அச்சங்கம் கூறியுள்ளது.

ஒமிக்ரோன் மாறுபாடு காரணமாக உலகம் முழுவதும் குறிப்பாக அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் கனடாவில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டியே வைத்தியர் பிரசாத் ரணவீர இதனை குறிப்பிட்டார்.

ஓமிக்ரான் மாறுபாட்டின் அதிக பரவல் தன்மை காரணமாக இலங்கையிலும் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்தார்.

இருப்பினும் தடுப்பூசி நடவடிக்கை காரணமாக இலங்கையில் கொரோனா தொற்று மரணங்கள் குறைந்துள்ளதாக தெரிவித்த வைத்தியர், அனைவரும் தடுப்பூசியை செலுத்த வேண்டிய அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்